Breaking News
recent

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் ! வெளிநாட்டு வாழ் இந்தியர் அனுப்பும் பணத்திற்கு 12.36 சேவை வரி!



வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்திற்கு 12.36 சேவை வரி விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இது நடைமுறை படுத்தப்பட்டால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும் இதனால் வெளிநாட்டு இந்தியா தொழிலாளார்கள் அதிகம்

 பாதிப்புக்குள்ளாவார்கள் என விடுதலை சிறுத்தைகள் மாநில துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். காயிதேமில்லத் ஆவணப்படம் வெளியிடுவதற்கு

 யுஏஇ வருகை தந்த ஆளூர் ஷா நாவசுக்கு  துபாயில் அமீரகத்தில் பணியாற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த  முத்தமிழ் வளவன், அசோகன் ,கவிமதி  உள்ளிட்ட பலர் வரவேற்பளித்தனர். 

ஆளூர் ஷாவாஸ் கூறியதாவது. இந்தியாவிலிருந்து சுமார் 2.5 கோடி மக்கள் வெளி நாடுகளில் பணி புரிகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் உடலுழைப்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களாவர். 


இதில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ. 18 ஆயிரத்தை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். இந்தியாவுக்கு ஆண்டுக்கு 7,100 கோடி டாலர் பணப் பரிவர்த்தனை மூலமாக வருகிறது. 

இதில் தமிழகத்தை சேர்ந்த வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மூலம்  800 கோடி டாலர் பணம் வருகிறது. இப்பொருளாதரத்தை இந்தியாவுக்கு அனுப்பி தருபவர்கள் பெரும்பாலனோர் தொழிலாளர்கள். 

இப்படியாக தங்களின் குடும்பத்தை ,உற்றார் உறவினரை தாய்நாட்டை பிரிந்து வெளிநாட்டில் ஓடாக தேய்ந்து சம்பாதித்து அனுப்பும் பணத்திற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு  12.36%  சேவை கட்ட்ணம் விதிக்கப்பட உள்ளதாக அறிந்து மிகுந்த மன வேதனையை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்  அவர்களுக்கு உதவி செய்ய விட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். தற்போது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாயகத்திற்கு ஒவ்வொரு முறை பணம் அனுப்பும் போது சேவை  கட்டணமாக(SERVICE CHARGE)  சிறிய தொகை பணம் அனுப்பி வைப்பவர்களிடம் வசூலிக்கபடுகிறது, 


புதியதாக நடைமுறைக்கு வரவுள்ளதாக சொல்லப்படும்  இத்தகைய 12.36%  வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தால்  அந்த சேவை கட்டணத்துடன் சேர்த்து அதாவது 2 திர்ஹமோ ,தினாரோ கூடுதலாக  வசூலிக்கபடலாம்,  இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதிக்கபடுவர்கள். 

ஒரு சிலர் இது சிறிய தொகைதானே என்கிறார்கள் வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு இது பெரிய தொகையாகும். இத்தகைய வரிவிதிப்பு முறையால்   வங்கிகளின் பணமதிப்பை விட குறைவான மதிப்பில் அனுப்பபடும் ஹவாலா என்ற வழிமுறையை தேர்தெடுக்கும் நிலைக்கு தள்ளபடுவார்கள், 


இதனால் இந்திய அரசிற்கு கிடைக்கும் வருமானமும் பாதிக்கபடும் ஹவாலா என்ற உக்தியும் பெருகும் வாய்ப்பு அதிகம் உள்ளது .இது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் .

இதனை நடைமுறைபடுத்தப்பட இருந்தால் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மீறி நடைமுறை படுத்த முயன்றால்  மக்களுடன் இணைந்து கடுமையாக எதிர்ப்போம் என்றார். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.