Breaking News
recent

இந்தியாவில் சுற்றுலா பயணிகளுக்கான இ-விசா திட்டம் தொடங்கியது!



வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான இ-விசா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார்.

சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் விதமாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கான இ-விசா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். 


அப்போது அவர் பேசுகையில், ''நாட்டின் சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் சுற்றுலா துறையின் பங்களிப்பு ஏறத்தாழ 7 சதவீதமாக உள்ளது. அது இரட்டிப்பாக்க வேண்டும்.

இதற்காக இந்த இ-விசா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, ரஷ்யா, உக்ரைன், பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், கென்யா, பிஜி, பின்லாந்து, ஆஸ்திரேலியா, தென்கொரியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், மெக்சிகோ, நார்வே ஓமன் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். 


அவர்கள் பணம் செலுத்திய 72 மணி நேரத்திற்குள் மின்னணு பயண அங்கீகாரத்தினை (ETA) பெற முடியும். இந்த இ-விசா 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஒரு வருடத்திற்கு சுற்றுலா பயணிகள் இரண்டு முறை இந்த வசதியை பெற முடியும்.
 
மேலும், இந்த திட்டம் அதிக ஆபத்து நிறைந்த நாடுகள் தவிர, உலகில் உள்ள மற்ற நாட்டிற்கும் விரைவில் நீடிக்கப்படும்'' என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.