Breaking News
recent

துபாயில் வேலை மாறும் வெளிநாட்டவர்கள் மீதான ‘பணி தடை’க்கு விதிவிலக்கு!



“ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், தமது வேலையை மாற்றிக் கொள்ளும்போது அவர்கள் மீதான ‘பணி தடை’ 1 வருடத்துக்கு விதிக்கப்படுவதில் மாற்றம் ஏதுமில்லை” என்று  அறிவித்துள்ள UAE தொழிலாளர் துறை அமைச்சு, “இந்த தடை குறித்து சில விதிவிலக்குகள் செய்யப்படலாம்” என்று தெரிவித்துள்ளது.

அமீரக தொழிலாளர் பொது சட்டப்படி, ஒரு வெளிநாட்டவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய வந்தபின், மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு மாறினால், ஒரிஜினல் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணி புரிந்து இருக்காவிட்டால், அவர் மீது 1 ஆண்டு ‘பணி தடை’ விதிக்கப்படும். 

இது பொது சட்டம் (general rule).ஆனால், நடைமுறையில் தொழிலாளர் துறை அமைச்சு இதை அமல் படுத்துவதில்லை. மாறாக, ஒரிஜினல் நிறுவனத்தில் 1 ஆண்டு பணிபுரிந்தபின் மற்றொரு நிறுவனத்துக்கு மாறினால், கண்டுகொள்வதில்லை. ஆனால், 1 ஆண்டுக்கு குறைவான காலம் பணிபுரிந்துவிட்டு நிறுவனம் மாறினால் தடை உண்டு.

தற்போது, “இந்த விதிமுறையில் சில விதிவிலக்குகள் செய்யப்படும்” என்று தொழிலாளர் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
என்ன விதிவிலக்கு?

வெளிநாட்டவர் முதல் நிறுவனத்தில் செய்த வேலையை விட புதிய நிறுவனம், உயர்வான வேலை (better position) கொடுக்க முன்வந்து, வெளிநாட்டவரின் தகமைக்கு ஏற்ற ஊதியமும் கொடுக்க முன்வந்தால், ‘பணி தடை’யில் இருந்து விதிவிலக்கு செய்யப்படும்.

இந்த ஊதிய விவகாரத்தில், மற்றொரு விஷயமும் உள்ளது. UAE தொழிலாளர் துறை அமைச்சு, வெளிநாட்டவர்களின் கல்வி தகமைக்கு வரையறுத்து வைத்துள்ள ஸ்கேலில் (a scale set by the ministry) உள்ள ஊதியம் அல்லது அதைவிட அதிகமாக, புதிய நிறுவனம் ஊதியம் வழங்கவேண்டும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.