Breaking News
recent

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் : அதிர்ச்சியில் கிறித்தவ உலகம்.....!!



சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்த பிரிட்டன் இஸ்லாமிய மயமாகி வருவதால் கிறித்தவ உலகம் அதிர்ச்சியடைந்து வருகிறது.

பிரிட்டனில் வாழும் கிறித்தவர்களுக்கு தங்கள் மதத்தின் மீது நம்பிக்கை குறைந்து இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகிறார்கள்.

மேலும் கிறித்தவ மக்கள் தங்கள் மதத்தின் மீது உள்ள நம்பிக்கை இழந்து வருவதாகவும் அவர்கள் கடவுள் மறுப்பு கொள்கையை தேர்வு செய்வதாகவும், அந்தந்த பகுதிகளில் உள்ள பிரிட்டனில் உள்ள கிறித்த தேவாலயங்கள் மதுபான பார்களாகவும் மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறித்தவ மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவக்கூடியவர்கள் கிறித்தவ தேவாலயங்களை வாடகைக்கு எடுத்து பள்ளிவாசல்களாகவும் நடத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டிலும் 5 இலட்சம் நம்பிக்கையாளர்களை கிறிஸ்தவ மதம் இழந்து வருகிறது. ஆண்டுக்கு 7,50,000 பேர் என்ற அளவுக்கு இறை நம்பிக்கை அற்றவர்களின் எண்ணிக்கைப் பெருகிவருகிறது.

கிறிஸ்தவ மதத்தவரின் எண்ணிக்கை குறைந்து வரும் அதேவேளையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் 39 சத வீதம் உயர்ந்து 30 இலட்சத்தை எட்டியுள்ளது.

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளனர்.

பிரிட்டனில் லட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வந்து கொண்டிருப்பதால் இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “THE Independent” என்ற பிரிட்டன் பத்திரிகை ஓர் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் கிறிஸ்தவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதைப் பார்த்து கிறிஸ்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லிம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால் தற்போது பிரான்ஸைக் காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லிம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று கணக்கெடுத்துள்ளனர். 


அதில் தலை நகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லிம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். (அமைப்புகள் மூலமாகவும், தனி நபர் மூலமாகவும் இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி)

ஏன் முஸ்லிம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தைப் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது. 


இந்த பொய்ப் பிரசாரத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இறுதியில் அவர்கள் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதே நிலை நீடித்தால் 2030 ல் பிரிட்டன் கிறித்தவ நாடாக இருக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.