Breaking News
recent

சேவை வரி சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்-இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) !


வெளிநாட்டிலிருந்து பெறப்படும் பணத்திற்கு 12.36% சேவை வரி சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்!

மத்திய அரசுக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) வேண்டுகோள்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களது குடும்பத்தாருக்கு அனுப்பும் பணத்திற்கு 12.36 சதவீதம் சேவை வரி செலுத்த வேண்டுமென்ற மோடி அரசின் அறிவிப்பு ஏழை,எளிய உழைப்பாளிகளின் பொருளாதார குரல் வலையை நெறிக்கும் செயலாகும்.

வெளிநாடுகளில் வேலை பார்க்கும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பல்வேறு சிரமமான வேலைகளை பார்த்து மிக குறைந்த அளவிலேயே சம்பளம் பெறும் அடித்தட்டு தொழிலாளர்கள் கால் வயிற்று தண்ணீரும் கால் வயிற்று சாப்பாடும் உண்டு மிச்சப்படுத்தும் பணத்தை வங்கிகள் மூலம் தங்களது குடும்பத்தாருக்கு அனுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே ஐந்தாயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பும் பணத்திற்கு 18 ரியால் அல்லது 18 திர்ஹம் இந்திய மதிப்பில் 300 ரூபாய் சேவை வரி செலுத்தி வரும் சூழலில் தற்போது குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கும் மொத்த தொகையில் 12.36% சேவை வரி செலுத்த வேண்டுமென்ற மத்திய அரசின் சட்டம் ஏழை,எளிய தொழிலாளர்களை கடுமையாக பாதித்து விடும்.

பிச்சை எடுக்கும் பெருமாளும் அதை பிடுங்கி திண்ணும் அனுமாரும் என்ற கதையை போல் ஆகிவிடாமல் மத்திய அரசு உடனடியாக 12.36% சேவை வரியை ரத்து செய்ய வேண்டுமென்று இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) தமிழ் பிரிவின் சார்பில் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.