Breaking News
recent

குவாண்டனமோ சிறை கைதிகளால் இஸ்லாத்தை ஏற்ற அமெரிக்க ராணுவ வீரர்!


குவாண்டனமோ அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கியூபா விற்கு சொந்தமான தீவு.இந்த தீவை தான் உலகின் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் பேசும் அமெரிக்கா அன்றைய நாஜி, அந்தமான் போன்ற கொடூர சிறை சாலையின் நவீன வடிவமான கொடூர சிறைச்சாலையாக பயன்படுத்துகிறது. 

திறந்த வெளியில் குளிரிலும் வெயிலிலும் கைதிகள் தங்க வைக்கப்படும் கொடுமை பல கொடூரமான சித்திரவதைகள் அரங்கேற்றப்படும் இடம். அதுவும் இந்த நவீன உலகில் வழக்கம் போல அமெரிக்காவின் பாசையில் கொடூரமானவர்கள் அடைக்கப்பட்டுள்ள இந்த சிறைசாலை கைதிகளின் நல்லெண்ணத்தில் கவர்ந்த இந்த சிறைசாலையின் அதிகாரி இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவரது பெயர் டெர்ரி ப்ருக். அரிசோனா மாகாணத்தில் ஜூலை 7, 1983 ஆம் ஆண்டு பிறந்தார். அமெரிக்காவின் கலாட்சார சீரழிவான வாழ்கையில் வாழ்ந்து வந்த ஒரு நபர்.

 கடவுள் நம்பிக்கையற்றவர். 2003 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் குவாண்டனமோ சிறைசாலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 

சிறைசாலை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை பற்றி டெர்ரி குறிப்பிடும் போது…. நான் குவாண்டனாமோவில் வேலை செய்த ஆரம்ப காலகட்டத்தில் நான் மிகவும் அச்சமுற்றே இருந்தேன்.

 காரணம் குற்றவாளிகள் முஸ்லிம்கள் கைதிகளாகவே நிறைந்திருந்தது தான். அவர்களை பார்க்கும் போது விஷசந்துக்களை பார்ப்பதை போல உணர்ந்தேன். பின்னர் சில முஸ்லிம் சிறைவாசிகளின் நட்பு கிடைத்தது. 

அவர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தினமும் ஐந்து வேலை தொழுகையை கடை பிடிப்பவர்களாகவும், திருக்குரானை படிப்பவர்களாகவும் இருந்தனர். 

நான் சிறைக்கு வெளியில் அவர்களிடம் இருந்து இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. மேலும் குரானை படித்து அதன் மூலம் இஸ்லாத்தை அறியும் நிலை ஏற்பட்டது. 

இதனால் இஸ்லாத்தை பற்றிய இவரின் பல தவறான எண்ணங்களுக்கு விடையும் கிடைத்தது. இவருக்கு மட்டுமில்லை இவரை போன்ற மேலும் பல சிறை அதிகாரிகளுக்கும். இந்த சூழலில் நான் இஸ்லாத்தை ஏற்கும் சூழல் ஏற்பட்டதாக குறிப்பிட்டார். 

அதுவும் சிறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் சிறை கைதிகளின் நல்லொழுக்கத்தில் கவரப்பட்டு இந்த முடிவுக்கு வந்தார். இஸ்லாத்தை ஏற்றத்தை பற்றி குறிப்பிடும் போது.. 

இஸ்லாத்தை ஏற்றமை மறக்க முடியாத சம்பவம். என்னைச் சுற்றியிருந்தவர்கள் என்னை முஸ்தபா என அழைத்த அந்நிமிடம் என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதது. என்னுடைய வாழ்கைக்கு சரியான வழியை அல்லாஹ் சிறை எண் 590 இல் இருந்த ‘அல் ரஷீதி’ மூலமாக கிடைக்கச் செய்தான். 

எனக்கு இஸ்லாம் எனும் நேர்வழி இருந்தது இதுவரை தெரியாமல் போனது. கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு குவாண்டனாமோ சிறையில்தான் இஸ்லாத்தை ஏற்கும் வாய்ப்பும், மதத்தின் இனிமையும், தூய்மையும், ஒப்பற்ற நேர்வழியையும் பெறமுடிந்தது. 

மதுவையும், கெட்டசெயல்கலையும் விட்டுவிட்டேன். நானும், என்னுடன் இருந்த மற்றும் சில சிறைக் காவலர்களும் இஸ்லாத்தை படித்ததற்காகவும், இஸ்லாத்தை ஏற்றதற்காகவும் அமெரிக்காவின் கொடூரத்திற்கு உள்ளானோம். 

இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டோம். பின்னர் இவர் எழுதிய Terry Holdbrooks “Traitor?” என்ற புத்தகத்தின் மூலம் அமெரிக்கா குவாண்டனாமோ சிறைச்சாலையில் நடத்தி வரும் கொடூரத்தையும் அப்பாவிகளுக்கு எதிராக அங்கு நடை பெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் வெளி உலகிற்கு எடுத்துரைத்தார். 

மேலும் குவாண்டனாமோ அநீதிக்கு எதிராகவும் அதை மூட வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகிறார் . முஸ்லிம்களை பற்றி குறிப்பிடும் போது முஸ்லிம்களை பார்த்து மற்ற சமூக மக்கள் பயப்பட வேண்டும் என்ற அவசியமே இல்லை என்று கூறினார். 

மேலும் ” நீங்கள் உங்களது நண்பர்களிடம கூறுங்கள் நாங்கள் முஸ்லிம்கள் என்று. அவர்களை உங்களது வீட்டுக்கு வரவழைத்து உபசரியுங்கள். பள்ளிவாசல்களுக்கு அழையுங்கள். 

இது தான் இஸ்லாம் என்ற உண்மையை எடுத்துரையுங்கள். ஊடகங்கள் கூறுவதை போல இஸ்லாம் குண்டுகளின் மூலம் அப்பாவி மக்களை கொல்ல சொல்லும் தவறான மார்க்கம் இல்லை என்ற உண்மையை உணர்த்துங்கள்.. 

“ இஸ்லாத்தை ஏற்றுள்ள நிலையில் அவர் சில வருடங்களுக்கு முன் மக்காவுக்கு சென்று தனது உம்றா பயணத்தை நிறைவு செய்தார். இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம். இதை இவருக்கு உணர்த்திய இடம் குவாண்டனாமோ என்னும் கொடூர சிறைகைதிகள் நிறைந்த சிறைசாலை? 

இவருக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்தவர்கள் அமெரிக்காவின் பாசையில் கூறவேண்டுமானால் கொடூரமான சிறைசாலை கைதிகள். இவர் இஸ்லாத்தை பற்றிய போதனைகளை அதன் கொள்கைகளை தெரிந்து கொண்டது குரானின் மூலம். 

இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள சரியான அளவுகோல் குரான் மட்டுமே. இந்த குரான் உலக மக்களுக்கு நல்லுபதேசமே அன்றி வேறில்லை..
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.