Breaking News
recent

சவூதியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள் !!



சவூதியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக சவூதி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜித்தாவின் மேற்குபகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத தெரிகிறது.
இது தொடர்பாக சவூதி புவியியல் ஆய்வு மையத்தின் தலைவர் ஸுஹைர் நவாப் கூறியதாவது:
“நேற்று(ஞாயிறு) இரவு 7.20 மணிக்குக் கடல் மட்டத்திலிருந்து 17.37 கி.மீட்டருக்குக் கீழே முதல் நிலநடுக்கமும் சுமார் மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் 32 கி.மீட்டருக்குக் கீழே இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது. செங்கடலில் 155 கிலோமீட்டரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் முறையே 2.65 மற்றும் 3.1 எனப் பதிவானது.
செங்கடலிலிலுள்ள பாறைகளாலும் அதிகமான நீர் இருக்கும் காரணத்தினாலும் இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கத்தை ஜித்தா நகரவாசிகள் உணரவில்லை” எனத் தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.