Breaking News
recent

வெளிநாடுகளில் உயிரழக்கும் இந்தியர்களின் உடல்களை கொண்டு வர இணையதள பக்கம் அறிமுகம்!



வெளிநாடுகளில் பணி புரியும் இந்தியர்கள் விபத்து போன்ற நிகழ்வுகளில் இறப்பவர்களின் உடல்களை கொண்டு வர ஆன்லைனில் விண்ணப்பிக்க வெளியுறவுத்துறை இணையதளத்தில் புதிய பகுதியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
வேலை மற்றும் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர் அங்கு விபத்து உள்ளிட்ட காரணங்களால் மரணம் நிகழக்கூடிய நிலையில், அவர்களது உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் ஏற்படும் இடையூறுகளைக் களைவதற்காக இணையதள பக்கம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
எமிகிரேசன் செக் (இசிஆர்) தேவைப்படும் நாடுகளான மலேசியா, ஜோர்டான், ஐக்கிய அரபு நாடுகள், ஏமன், லெபனான், கத்தார், ஓமன், குவைத், ஈராக், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, லிபியா, சூடான், சிரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு http://www.moia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இறந்தவரின் உடல் சொந்த ஊருக்கு வந்து சேரும் வரையிலான நிகழ்வுகளை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.