Breaking News
recent

கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்வது சரியா தவறா?




வயிற்றில் வளரும் தங்களது குழந்தையை ஸ்கேன் செய்து பார்ப்பதிலும் பலரும் ஆவலாக இருக்கின்றார்கள். இதில் முக்கியமான விஷயம் ஸ்கேன் செய்வது நல்லதா கெட்டதா என்ற குழப்பம் நிகழுகிறது. இது இன்று பெரும்பாலான தம்பதிகளிடம் இருக்கும் பெரியதொரு கேள்வியாக அமைந்து விடுகின்றது.
பெரும்பாலான தம்பதிகளுக்கு ஸ்கேன் செய்து பார்ப்பதால் குழந்தைக்கோ அல்லது தாயிக்கோ ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? ஒரு தடவை ஸ்கேன் செய்து விட்டால் அதன் பின்னர் வைத்தியரை சந்திக்கச் செல்கின்ற ஒவ்வொரு தடவையும் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டுமா? போன்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகின்றது.
ஸ்கேன் செய்வதால் உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது உங்களுக்கோ எந்த பிரச்சினையும் ஏற்பட போவதில்லை! இன்று உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சி வீதம் அவர்களின் ஆரோக்கியம் என்பனவற்றை அறிந்து கொள்வதற்கும், அதற்கேற்றவாறு உங்களுக்கு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கும், குழந்தை பிறப்பதற்கான திகதிகளை நீங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கும், அதற்கேற்றவாறு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்வதற்கும் ஸ்கேன் செய்வது மிகவும் முக்கியமானது..
எந்த விதமான கதிர்வீச்சு முறையும் இந்த ஸ்கேனிங் முறையில் பயன்படுத்துவதில்லை என்பதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.