Breaking News
recent

புனித கஃபா சாவி காப்பாளர் காலமானார்!!!




புனித கஃபத்துல்லாஹ்வின் திறவுகோலை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் பணிக்குரிய நபரான ஷெய்ஹ் அப்துல் காதிர் அல் ஷெய்பி என்பவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். 74 வயதையுடைய அப்துல் காதிர் அஷ்ஷெய்பி, கஃபாவின் சாவி பாதுகாக்கும் பொறுப்பை வகித்துவந்தார்.
இஸ்லாம் மக்காவில் உருவாகுவதற்கு முன்னர் இருந்தே அல்-ஷெய்பி பரம்பரையினர் கஃபத்துல்லாஹ்வின் திறவுகோலை வைத்திருக்கும் பரம்பரையாக இருந்துவந்தனர்.
அன்றிலிருந்து இன்றுவரைக்கும் அல்-ஷெய்பி பரம்பரையினரே கஃபாவின் திறவுகோலை வைத்திருக்கும் குடும்பமாகத் திகழ்ந்து வருகின்றனர்.
நபி (ஸல்) அவர்களுடன் ஸஹாபியாக இருந்த ஷெய்பா பின் உதுமான் அபி தல்ஹா என்பவரின் பரம்பரையில் வந்தவரே தற்பொழுது காலமாகி இருக்கின்றார். இதன் பின்னர் இப்பொறுப்பு ஷெய்பா பரம்பரையில் வந்த பிரிதொரு நபருக்கு வழங்கப்படும்.
அல்செய்பா குடும்பத்தினர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களது காலத்திலிருந்து தொடர்ந்துவரும் பரம்பரையாகும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.