Breaking News
recent

சவூதி அரேபியாவில் தினமலர் இணையதளத்துக்குத் தடை!



சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கெடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிட்டுவந்த காரணத்தால் தினமலர் இணையதளம் சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்பத்திரிகை பிரதிகளும் அங்குத் தடை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் தினமலர் இணையதளம் திடீரென தடை செய்யப்பட்டுள்ளது. அப்பத்திரிகையில் வெளியாகும் செய்திகள், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவினைக் கெடுக்கும் வகையில் வேண்டுமென்றே திரித்து வெளியிடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இது தொடர்பாக சவூதி அரேபியாவின் தகவல் தொடர்பு அமைச்சகத்தில் ஆதாரங்களுடன் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவற்றைப் பரிசீலித்த தகவல்தொடர்பு துறை, சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் உண்மையிருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து தினமலர் இணையதளத்தை முடக்கியது.
அத்துடன் அப்பத்திரிகையின் பிரகளுக்கும் சவூதியில் தடையிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னர், இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபி குறித்து கேலி சித்திரங்கள் வெளியிட்டது தொடர்பாக துபை, சவூதி அரேபியா முதலான நாடுகள் தினமலரைத் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அது போன்ற தவறுகள் நடைபெறாது என்று மன்னிப்பு கேட்டுகொண்டதைத் தொடர்ந்து அதன்மீதான தடை நீக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் அத்தளம் தடை செய்யப்பட்டுள்ளது.
வளைகுடாவில் வாழும் தமிழர்கள் மத்தியில் தினமலர் மீதான இத்தடை மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இது பத்திரிகை துறைமீதான அடக்குமுறை என்ற விமர்சனமும் மேலெழுந்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.