Breaking News
recent

வளைகுடா நாடுகளுக்கு ஒருங்கிணைந்த சுற்றுலா விசா வழங்க திட்டம்! 35 நாட்டினர் பயனடைவர்!



ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 25 நாடுகளுக்கும்,  உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய  மூன்று நாடுகளுக்கும் சேர்த்து தற்போது 'செங்கன் விசா' என்ற  நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், இந்த  நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவோர் ஒரு விசா அனுமதி  பெறுவதன்மூலம் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவர முடியும்.

இதே  போன்றதொரு பொதுவான ஒரே விசா என்ற நடைமுறையை பஹ்ரைன்,  குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு  எமிரேட்ஸ்(யுஏஇ) உள்ளிட்ட (ஜிசிசி)வளைகுடா நாடுகளை உள்ளடக்கி  இந்த ஒருங்கிணைந்த விசா திட்டத்தை அமல்படுத்த  சம்பந்தப்பட்ட  நாடுகள் திட்டமிட்டு வருவதாக  குவைத் நாட்டின் வர்த்தகதுறை உயர்  அதிகாரி சமீரா அல் கரீப் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது  ,

ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவை வழங்கி  முதல் கட்டமாக 35  நாட்டினருக்கு மட்டும் இவ்விசாவை தருவதற்கு  திட்டமிடப்பட்டு  வருகிறது.இதன் மூலம் வர்த்தகமும் சுற்றுலாதுறைக்கான வாய்ப்புகள்  பெருகும் என‌ அவர் கூறியுள்ளார்.


ஆனால் 35 நாடுகள் எது என்பதை  அவர் தெரிவிக்கவில்லை. தற்போது சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய  அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளுக்கு ஒரு  நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல வேண்டுமாயின் தனி விசா  பெற்றே செல்ல வேண்டும். இச்சூழலில் பொதுவான விசா கொண்டு  வருவது வளைகுடா செல்வோருக்கு வரப்பிரசாதம் என்றே சொல்ல  வேண்டும். 

வளைகுடாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 31 சதவிகிதத்தினர்  வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான விசா  அமல்படுத்தப்பட்டால் வர்த்தகம் வளர்ச்சியுறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.


அதே சமயம் ஏதேனும் ஒரு நாட்டில்  வெளிநாட்டவர் யாருக்கேனும் தடை விதிக்கப்பட்டால் ஒட்டு மொத்த  வளைகுடா நாடுகளிலும் அது எதிரொலிக்க வாய்ப்புள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.