Breaking News
recent

சென்னையில் ஓராண்டில் 3000 போலி பதிவுத் திருமணங்கள்!




சென்னையில் உள்ள இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 2013ஆம் ஆண்டில் மட்டும் வழக்கறிஞர்களின் மூலம் 3000க்கும் அதிகமான திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு வழக்கிற்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய ஆய்வுகளைச் செய்தபோது, 2013ஆம் ஆண்டில் ராயபுரத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் 1559 காதல் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதே ஆண்டில் வடசென்னை பதிவு அலுவலகத்தில் 1937 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இந்த திருமணங்கள் எல்லாம் முதலில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரகசியமாக நடப்பதாகவும் பின்னர் வழக்கறிஞர்கள் அளிக்கும் சான்றிதழ்கள் மூலம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், போலி பதிவுச் சான்றிதழ்களைத் தயாரித்து, அப்பாவி பெண்களை தங்களின் மனைவி என்று உரிமை கோரி சிலர் மிரட்டுவதன் நோக்கம் பணம் பறிப்பதாகவே இருக்கும் என்றும், 
இது குறித்து விரிவான விசாரணை நடத்தி போலிப்பதிவு திருமணங்களின் பின்னணியில் இருப்பவர்கள், அவர்களுக்கு துணை போன பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 
என்றும். இத்தகைய போலிப் பதிவுத் திருமணங்களால் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்திருக்கும் உயர்நீதிமன்றம், வழக்கறிஞர்கள் காதல் ஜோடிகளுக்கு தங்களது அறையில் ரகசிய திருமணம் செய்து வைக்கக்கூடாது என்றும், 
அப்படி திருமணம் செய்து வைத்த்தாகப் புகார் வந்தால், அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருமணத்தைப் பதிவுசெய்யும்போது, தம்பதி இருவரும் வருவதை பதிவுத் துறை அதிகாரிகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.