Breaking News
recent

‘இஸ்லாமிய ஹிலாபத்’திலிருந்து பாதுகாப்புப்பெற பிரான்ஸ் சென்றார் சவுதி இளவரசர்



வளைகுடா நாடுகளின் தலைமை நாடாக அமையும் சவுதி அரேபியா, தற்பொழுது தனது வலயத்தில் ஏற்பட்டிருக்கும் ‘இஸ்லாமிய ஹிலாபத்’ அச்சத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமான பேச்சுவார்த்தைக்கு தனது இளவரசரை பிரான்ஸூக்கு அனுப்பி இருக்கிறது.
இஸிஸ் அமைப்பால் தனது நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தால் தற்பொழுது மேலத்தேய உதவியைக் கோரி இருக்கின்றது சவுதி அரேபியா.
இதன் முதற்கட்டமாக இளவரசர் சல்மான் நேற்று திங்கட்கிழமை பிரான்ஸின் தலைநகர் பரிஸிற்கு பறந்தார். சிரியாவிலும், ஈராக்கிலும் தற்பொழுது இஸிஸ் தீவிரவாதம் தலைகட்டி இருப்பதால் இதனை வேரோடு ஒழித்து, அங்கு சமாதானத்தை மேற்கொள்வதற்கும், சவுதி அரேபிய பிராந்தியத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கும் இருநாடுகளின் உறவுகள் வழிவகுக்கும் என இளவரசர் பரிஸ் நகரிலிருந்து தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.