Breaking News
recent

முத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் கலவரம். நடந்தது என்ன உண்மையும் பின்னணியும்...!!!முத்துப்பேட்டை, செப்டம்பர் 04: முத்துப்பேட்டையில் நகர இந்துமுன்னணியின் சார்பில் 22 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது .சரியாக 4:30 மணிக்கு ஜாம்புவநோடையில் தொடங்கிய ஊர்வலம் மிகவும் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்று சரியாக 6:15 மணிக்கு ஆசாத் நகர் பாலத்தை வந்தடைந்தது. 

கடந்த 01-09-2014 அன்று மாவட்ட போலீஸ் சூப்பிராண்டு காளிராஜ் மகேஷ் குமார் தலைமையில் முத்துப்பேட்டையில் அனைத்து முஹல்லா வாசிகள் முன்னிலையில் நடைபெற்ற அமைதிக்கான வழிமுறைகள் கூட்டத்தில், விநாயகர் ஊர்வலத்தை 5 மணிக்கு

 முன்னதாகவே இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளை கடந்திட வேண்டும் என்றும், பள்ளிவாசல் அருகில் நெருங்குகின்ற வேளையில் பாங்கு சொல்லப்பட்டு முடியும் வரை ,பள்ளிவாசலில் இருந்து சிறிது தூரத்திற்கு முன்னால் நின்று செல்ல வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

அதனடிப்படையில் சரியாக 6:15 மணிக்கு ஆசாத்நகர் மேம்பாலம் அருகில் வந்துகொண்டிருந்த ஊர்வலத்தை தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் நிறுத்தி வைத்தனர். இதனிடையே புதுக்காளியம்மன் கோயிலிலிரிந்து எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலை ஆசாத்நகர் தீன் பில்டிங் அருகிலும் ,அதே போல் ஆலங்காட்டிளிருந்து 

எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலை புதிய பேரூந்து நிலையம் அருகிலும் தடுப்பு வேலிகள் போடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே தீன் பில்டிங் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணியினர், தங்களை ஆசாத் நகர் பாலம் அருகே செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறி கூச்சல் குழப்பமிட்டனர் தடுப்பு வேலிகளை தகர்த்து முன்னேற முயற்சித்தவர்களிடம் தஞ்சை மாவட்ட எஸ்பி தர்மராஜ் சமாதான படுத்தினார் .

அப்போது அதிலிருந்த வன்முறையாளர்கள் துலுக்க நாய்களா போன்ற சட்டவிரோத கோஷங்களை எழுப்பினார்கள். இதனை கவனித்து கொண்டிருந்த தஞ்சை மாவட்ட எஸ்பி தர்மராஜன் கடும் எச்சரிக்கை விடுத்தார் .பின்னர் பாங்கு முடிந்தவுடன் ஆசாத் நகர் பாலம் அருகே நிருத்திவைக்கப்பட்டிருந்தவர்கள் பாலத்தின் வழியாக ஆசாத் நகர் முக்கத்தை கபாந்து சென்றனர் .

பின்னர் அங்கிருந்து ஆமை வேகத்தில் சென்ற ஊர்வலத்தினர் சரியாக இரவு 8 மணியளவில் பழைய பேரூந்து நிலையத்தை வந்தடைந்தனர் . பழைய பேரூந்து நிலையத்திலேயே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர் .அப்போது கலவரத்தை தூண்டும் விதமாக பழைய பேரூந்து நிலையத்தில் இயங்கி வரும்

 இஸ்லாமியருக்கு சொந்தமான அஜந்தா மளிகை கடையின் சட்டர் மீது கல்வீசி தாக்கினர் .இதில் அந்த கடையின் டியுபு லைட்சேதம் அடைந்தது .கூட்டத்திற்குள் நின்று செய்தி சேகரித்து கொண்டிருந்த என் மீதும் இன்னும் சக பத்திரிக்கையாளர்கள் மீதும் கல்வீசி தாக்கினார்கள் .இதில்balattha காயம் ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினோம் .பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம் .

பேரூந்து நிலையத்தில் காவல்துறையால் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை காலால் எட்டிஉதைத்து அங்கிருந்து திபு திபு வென கட்டுப்பாட்டை இழந்த வன்முறை கூட்டத்தினர் ,புதுபள்ளிவாசல் வரை ஓட்டம் பிடித்தனர் .பின்னர் ஆமை வேகத்தில் வன்முறை கோஷங்களை எழுப்பிக்கொண்டு நகர்ந்த ஊர்வலகாரர்கள் சரியாக 8:30 மணிக்கு கொய்யா வீட்டின் அருகே உள்ள முக்கத்தை வந்தடைந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வன்முறை கும்பல் ,கொய்யா வீட்டிற்கு அருகே உள்ள நேனா மூஸா என்பவருக்கு சொந்தமான வீட்டின் கேட்டை காலால் எட்டி உதைத்து தாக்கினர் .

இதனை காவல்துறையினர் kaifatti வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் .பின்னர் சரியாக 8:45 மணிக்கு பங்களாவாசலை வந்தடைந்த வன்முறை கும்பல் அப்பகுதில் உள்ள தீன் மளிகை உரிமையாளர் நவாஸ் வீடு , ASN புருகானுதீன் வீடு , SLM சாஹிபு மரைக்காயர் வீடு முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் இலியாஸ் மாமனார் வீடு , நதீம் வீடு ,உள்ளிட்ட 10 வீடுகளை ஊர்வலத்தில் வந்த வன்முறை கும்பல்களால் கல்வீசி தாக்கபட்டுள்ளன .இதில் பலர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின .

இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் பங்கலாவாசல் அருகே திரண்டனர் .பின்னர் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தை கண்டித்தும் ,சரியாக பாதுகாப்பு வழங்காத அதிகாரிகளை கண்டித்தும் கோஷமிட்டனர் .

இந்துமுன்னணியினர் நடத்திய ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் முத்துப்பேட்டை முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர் .இதனிடையே கொய்யா திருமண மண்டபம் அருகே மணி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையை யாரோ சில மர்ம ஆசாமிகள் தீயிட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது .

வன்முறையில் தொடர்புடையவர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து அமைதி பூங்காவை திகழும் முத்துபேட்டையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம் .VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.