Breaking News
recent

பொது பானையில் தண்ணீர் குடித்த தலித் மாணவர்களை அடித்து வெளியேற்றிய கொடுமை!



ராஜஸ்தான் மாநிலத்தில் பொது பானையில் தண்ணீர் குடித்ததற்காக தலித் மாணவர்களை அடித்து வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சாதியற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்ற கருத்தை குழந்தைப் பருவத்தில் இருந்தே விதைக்க வேண்டும். இதற்காகத்தான், பள்ளிகளில் மாணவர்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்தப்படுகின்றனர். ஆனால், இந்த சீர்திருத்தத்தையும் சிதைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கின்றன. ராஜஸ்தானில் இன்று நடந்த சம்பவமே சாட்சியாக இருக்கிறது. 

பிகானர் நகரின் நோகா பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் படிக்கும் தலித் மாணவர்கள் சிலர் இன்று அங்குள்ள பொது மண்பானையில் உள்ள தண்ணீரை குடித்தனர். இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர் மங்கள் சிங் ராஜ்புத், அந்த பானையில் உள்ள தண்ணீரை ஏன் குடித்தீர்கள்? என்று கூறி 11 மாணவர்களை அடித்து வகுப்பறையில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. 

இதுபற்றி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கைது செய்துள்ளனர். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.