Breaking News
recent

எபோலா வைரஸ் பரவல்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!



எபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை எனில், நவம்பர் மாதத்திற்குள் 20 ஆயிரம் பேர் நோய் பாதிப்புக்கு ஆளாகலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
எபோலா வைரஸ் தாக்கம் குறித்து , உலக சுகாதார அமைப்பை சேர்ந்த வல்லுனர்கள் , மருத்துவ பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். எபோலா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை எனில் , மாபெரும் அழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கட்டுரையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளான சியரா லியோன், கினி, நைஜீரியா , லைபீரியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில மாதங்களாக எபோலா வைரஸ் பரவி வருகிறது. எபோலா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான 5 ஆயிரத்து 762 பேரில், 2 ஆயிரத்து 793 பேர் உயிரிழந்துள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.