Breaking News
recent

இந்துத்துவா இந்தியாவின் அடையாளம் அல்ல! : உமர் அப்துல்லா



லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் இஸ்லாமியர்கள் இந்துக்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்று கிறார்கள் என்று பாஜகவினர் கூறு வது வெற்று சவடால்களே, இதன் மூலம் பாஜக ஆட்சி தோற்றுவிட்டது என்பதே நிரூபணமாவதாக ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சாடியுள்ளார்

புதுதில்லியில் ஞாயிறன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா கூறியதாவது:பாஜகவினரின் மதவாத பேச்சுகள் குறித்து கவலைப்படத் தேவை யில்லை. பாஜகவினர் தங்களது ஆட்சி தோல்வி அடைந்து வருவதை தாங்களே ஏற்றுக் கொண்டு வருவதைத்தான் இப்பேச்சுகள் காட்டு கின்றன. 


இந்த பேச்சுக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் சாதித்து வருவது குறித்து நீங்கள் ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? முந் தைய பிரதமர் மன்மோகன் சிங் அமைதி யாக இருந்ததைப் பற்றி பாஜகவினர் எப்போதும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

ஆனால் இந்த பிரதமர் மோடி அவரைவிட அமைதியாக இருந்து வருகிறார். அரசியல் நிகழ்ச்சிகளிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் எழுதி வைத்துக் கொண்டு படிப்பதைத் தவிர அதற்கு மேல் வேறொன்றையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.மத ஒற்றுமை குறித்து மோடியின் சுதந்திர பேச்செல்லாம் ஒரு புறம் சகிப்புத்தன்மை பற்றியும், மறுபுறம் அதை கடைப்பிடிக்காமலிருக்கும் வழக்கமான அரசியல்தான். 


அவர் மற்ற பாஜக தலைவர்களின் அராஜகமான பேச்சுக்களை அனுமதிப்பதும் அவர்களை கண்டிக்காமல் இருந்து கொள் வதும்தான் நடக்கிறது. ஆட்சியும் நிர்வாகமும் தோல்வி அடைந்ததை மறைத்து, அவர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றனர்.

மக்களின் நலன்களுக்கான விசயங்களில் கவனம் செலுத்த தொடங்கி னால், இந்த பேச்சுகளெல்லாம் அவர் களுக்கு தேவையற்றதாகி விடும்.முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் பரவாயில்லை. அவர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது பத்திரிகை யாளர்களைக் கூட்டிச் செல்வார். ஆனால் மோடி யாரையும் கூட்டிச் செல்வதில்லை.

அவர்களிடம் பேசு வதும் கிடையாது.ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் சிங்கின் `அனைத்து இந்தியர்களும்’ `இந்துக்கள்தான்’ என்ற பேச்சைப் பொறுத்தவரை மோடி கருத்தே கூறமாட்டார். ஒரு மதம், ஒரு சமூகம், ஒரு சித்தாந்தம், ஒரே சிந்தனை இவற்றைத்தான் எதிர்த்து தானே நமது முன்னோர்கள் போராடினார்கள்?


உத்தரப்பிரதேச பாஜகவின் தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் முஸ்லிம்கள் அதிகமாக குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுவது பாஜகவின் சொந்த அடிப்படையான மதவாத அரசியலே. தேசத்தை பிளவுபடுத்தி அதில் குளிர்காயும் முயற்சியே.

சமீபத்திய இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்தது பாஜகவிற்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது. அவர்களால் நல்ல ஆட்சியை அளிப்போம் என்று கூறி தேர்தலில் போட்டியிட முடியாது,

எனவே அவர்கள் வழக்கமான மதவாத அரசியலை பயன்படுத்துகின்றனர்.மோசடியான தகவல்களை தருவதற்கு அவர்கள் என்றுமே தயங் கியது கிடையாது. `லவ் ஜிஹாத்’ என்று கூறுவது நாலந்திர சினிமா கதை வசனமாகும். 


இதுபோன்ற கேவலமான வசனங்களை ஒரு பெரிய கட்சியின் மாநிலத் தலைவர் கூறுவதை யாரும் எதிர்பார்க்க முடியாதுதான்.இந்து அல்லது முஸ்லிம் இரு தரப்பிலும் யார் யாரைக் காதலித் தாலும் அது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம். 

இதில் எங்கே ஒரு சமூகமே திட்ட மிட இடம் உள்ளது? இதில் எங்கே அரசியல் உள்ளது? காதல்மதங்களையும், குறுகிய அனைத்து அடையாளங்களையும் கடந்தது. இந்தியாவின் அடையாளம் இந்துத்துவா அல்ல; 1947க்கு பின்னர் நாடு பிழைத்திருக்குமா என்று எதிர்பார்க்கவில்லை. 

எல்லோரும் நாடு உடைந்து விடும் என்றும் மதத் தின் அடிப்படையில் பிளவுபடும் என் றும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்தியா ஒற்றுமையுடன் நின்றது. இனியும் இருக்கும்.

ஹரியத் மாநாட்டுத் தலைவர்களை சந்தித்ததற்காக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண் டது முற்றிலும் அபத்தமானது. பாகிஸ்தான் இந்தியாவில் தலையிடும் என்று கூறப்பட்டது. இப்போதல்ல முன்னரும் இனியும் தலையிடத்தான் போகிறது; 


பேச்சுவார்த்தையின் மூலமாக பிரச்சனைகளுக்கு நிரந்தரதீர்வுகாண வேண்டும். பேச்சு வார்த்தைகளை முறித்துவிட்டால் பாகிஸ்தான் தலையிடாமல் இருக் குமா? எனவே நிரந்தர அமைதி ஏற்பட பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடர வேண்டும்.இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.