Breaking News
recent

குவைத்தில் :ஹஜ் பெருநாள்க்கு 9 நாட்கள் விடுமுறை!



தமிழில் தியாகத் திருநாள்  என்றும் உருது மொழியில் பக்ரீத் என்றும் அழைக்கப்படும் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய திருநாளாகும் ஆகும். 
 
இதை அரபு மொழியில் ஈத் அல் - அதா என்றும் இந்தியாவில்  ஹஜ் பெருநாள் என்றும் அழைகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இத் தியாக திருநாள் வருகிற அக்டோபர் மாதம் 4ம் தேதி சனி கிழமை குவைத், சவூதி அரேபியா போன்ற உலக நாடுகளில் உள்ள முஸ்லிம்களால் அனுசரிக்கப்பட
இருக்கிறது.
இதை முன்னிட்டு அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக் கிழமை முதல் அக்டோபர் மாதம் 11ம் தேதி சனி கிழமை வரை ஒன்பது நாட்கள் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் குவைத் நாடு விடுமுறை அறிவித்துள்ளது.
இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல் ஹஜ் 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.
இந் நாளிலேயே தான் ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் போன்ற பிராணிகளை அறுத்து பலியிட்டு குர்பானி செய்யப்படுகிறது.
 
மேலும் முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் என்னும் புனித பயணம் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா நகரங்களில் நிறைவேற்றப்படுகிறது.
 
 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.