Breaking News
recent

துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நவம்பர் 6 ல் துவக்கம் !



துபாயில் வருடந்தோறும் உலக புகழ் பெற்ற குளோபல் வில்லேஜ் கண்காட்சி நடைபெறும். இதில் உலகில் உள்ள‌ சுற்றுலா பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது நாடுகளின் கலை மற்றும் கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில் பெவிலியன்களை அமைத்து கவர்வதோடு வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான கடைகளும்

 அமைக்கப்பட்டிருக்கும். உலக நாடுகளில் உள்ள பல்வேறு பொருட்களும் இங்கு கிடைக்கும். இந்த வருடம் நவம்பர் 6 ல் தொடங்கி ஏப்ரல் 11, 2015 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 65 நாடுகள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என்றும் 3500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குளோபல் வில்லேஜ் தொடங்கி நிறைவு நாள் வரை அந்தந்த நாடுகளின் கலாச்சார நடனங்கள்,


சிறுவர் சிறுமியர்களுக்கு நிகழ்ச்சிகள் என 12,000-க்கு மேற்பட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெறும். முந்தைய குளோபல் வில்லேஜில் இந்திய பெவிலியன் பகுதியில் தமிழகத்தின் முக்கியப் பகுதிகளான ரிப்பன் பில்டிங், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை நினைவு கூறும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.