Breaking News
recent

சவுதி அரேபியாவில் நினைவாற்றல் இறைவனின் மிக பெரிய அருள்!!! அதை இழந்த தால் 30 ஆண்டுகளாக அனைத்து சுகங்களையும் இழந்த மனிதர்!!!!



இன்று சவுதி செல்வ செழிப்புள்ள நாடுகளில் ஒன்றாக திகழ்வதால் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சவுதிக்கு பணி தேடி வருகின்றனர்

ஆனால் சவுதியில் இன்று இருக்கும் வளமும் செழிப்பும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை
குறிப்பாக சவுதி அரேபியாவின் விவசாய நிலமான அல் கஸீம் பகுதி 30 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பின் தங்கியே இருந்தது 
இன்று பல்லாயிர கணக்கான வெளி நாட்டவர் பணியாற்றும் அல்கஸீம் நகரத்தை தனது பிறப்பிடமாக கொண்ட அப்துல்லாதுவைஜிரி என்பவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகரத்தில் அவருக்கு பணியில்லத தால் சவுதியின் மற்றொரு முக்கிய நகரமான அறாருக்கு பணி தேடி சென்றார்
அங்கும் அவருக்கு பணி கிடைக்கா ததால் அங்கிருந்து பணி தேடி பாக்கிஸ்தான் சென்று விட்டார்
பாகிஸ்தான் சென்ற பிறகு அவருக்கு ஏர்பட்ட ஏதோ ஒரு நோயால் கடந்த கால நினைவுகளை அவர் இழந்து விட்டார்
அவர் யார் எங்கிருந்து வந்தார் என்பன போன்ற எல்லா நினைவுகளையும் அவர் இழந்து விட்டதால் பாகிஸ்தானிலேயே தங்கி விட்டார்
சவுதியில் அவரது குடும்பம் அவரை நிண்டகாலமாக சவுதி முழுவதும் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை
ஆயினும் அவரது குடும்பம் தேடும் முயர்ச்சியை கைவிடவல்லை சில இணைய தள விளம்பரங்களின் மூலம் அவர் பாகிஸ்தானில் இருப்பதை அறிந்து கொண்டு அவரை சவுதி அழைத்து வரும் முயர்ச்சியில் அவரது குடும்பம் இறங்கியது
30 ஆண்டுகள் சொந்த மண்ணையும் சொந்த குடும்பத்தையும் பிரிந்திருந்த அப்துல்லா துவைஜிரி கடந்த புதன் கிழமை பாக்கிஸ்தானில் இருந்து வந்த விமானத்தில் அவரது சொந்த மண்ணான அல் கஸீம் வந்து இறங்கினார்
அங்கு அவரை வரவேர்க்க அவருது குடும்பம் கடந்த கால நினைவுகளோடு அல்கஸீம் விமான நிலையத்தில் குழுமி இருந்தது
அவர் வந்து இறங்கிய பிறகு அங்கு பாசமும் உணர்ச்சிகளும் கலந்த நிகழ்வு கண் கொள்ளா காட்சியாக இருந்த தாக அல் ஆஜில் தெரிவிக்கின்றது
இது ஓரு நிகழ்வு இந்த நிகழ்வில் ஏரளமான பாடங்களும் படிப்பினைகளும் நிறைந்துள்ளன
பாடம்1
செல்வம் என்பது எந்த ஒரு நாட்டிர்கும் எந்த ஒரு மனிதனுக்கும் சொந்த மானது அல்ல இன்று ஏழையாக இருக்கும் நாடுகளும் மனிதர்களும் நாளை செல்வ செழிப்புள்ள நாடுகளாகவும் மனிதர்களாகவும் மாறலாம்
பாடம் 2
இறைவன் அந்த செல்வத்தை ஒரு நாட்டிர்கு கொடுக்க நினைக்கும் போது யாராலும் அதை தடுக்கவும் முடியாது பறிக்க நினைக்கும் போதும் யாராலும் அதில் இருந்து தப்பவும் முடியாது
30 ஆண்டுகளுக்கு சவுதி நாட்டவரையே வேறு நாடுகளுக்கு பணிக்காக செல்லும் நிர்பந்த த்தை ஏர்படுத்திய இறைவன் இன்று பல நாட்டவரையும் சவுதிக்குள் கொண்டு வந்து குவித்துள்ளான்
பாடம் 3
நினைவாற்றல் என்பது இறைவன் நமக்கு அருளிய மிக பெரிய அருளாகும் அந்த அருளை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நொடியும்அனுபவித்து கொணடே அதன் அருமை புரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் நினைவாற்றல் தான் மனிதனை நாட்டோடு வீட்டோடு குடும்பத்தோடு இணைத்து வைத்துள்ளது அந்த அருளை அப்துல்லா துவைஜிரி இழந்த தால் தான் 30 ஆண்டுகாலமாக தமது குடும்பத்தையும் சொந்த மண்ணையும் பிரிந்திருக்க நேரிட்டது
நாம் வாழும் காலம் எல்லாம் நல்ல நினைவாற்றலையும் ஆரோக்கிய மாக வாழ்வையும் இறைவனிடம் யாசிக்கும் அதே நேரத்தில் அந்த அருளுக்கு நன்றி செலுத்த குடியவர்களாக வாழும் இறைவன் நமக்கு தருவானாக என பிரார்த்திப்போம் 
30 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய துவைஜிரியை குடும்பத்தினர் அழைத்து செல்லும் காட்சியை தான் படம் விளக்குகிறது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.