Breaking News
recent

வி.களத்தூரில் அனைத்து அரசு பள்ளிகளில் வரும் 24ம் தேதி முதல் கலவை சாதம்!



பெரம்பலூர் வட்டாரத்திலுள்ள 116 அங்கன்வாடி மையங்களிலும் முன்னோடியாக கடந்த ஆண்டு முதல் சத்துணவில் கலவை சாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல தற்போது தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் உயர் மேல்நிலைப் பள்ளிகளில் சத்துணவில் கலவை சாதம் வழங்கப்படவுள்ளது. 

இத்திட்டம் வரும் 24ம் தேதி முதல் பெரம்பலூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி பெரம்பலூர் வட்டாரத்திற்குட்பட்ட பெரம்பலூர், சிறுவாச்சூர், அம்மாப்பாளையம், வேலூர் அரசுப்பள்ளிகள் என 4 மையங்களில் கலவை சாதம் தயாரிப்பதற்கு சிறப்புப் பயிற்சி நடந்தது.

இதன்படி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சிக்கு பெரம்பலூர் ஒன்றிய மேலாளர் (சத்துணவு) வாசுகி தலைமை வகித்து பேசுகையில் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வாரங்களில் திங்கட்கிழமை காய்கறி பிரியாணி, மிளகுதூள் முட்டை, 

செவ்வாய்க்கிழமை கொண்டைக்கடலை, தக்காளிமுட்டை மசாலா, புதன்கிழமை தக்காளிசாதம், மிளகுத்தூள் முட்டை, வியாழக்கிழமை சாதம் சாம்பார், வேக வைத்த முட்டை, வெள்ளிக்கிழமை கறிவேப்பிலை அல்லது கீரைசாதம், முட்டை மசாலா மற்றும் மிளகாய்ப் பொடியில் வறுத்த உருளைக்கிழங்கு வழங்கப்பட உள்ளது.

மாதத்தின் இரண்டு மற்றும் நான்காம் வாரங்களில் திங்கட்கிழமை சாம்பார் சாதம், வெங்காயம் தக்காளி முட்டை மசாலா, செவ்வாய்க்கிழமை மீல்மேக்கர் காய்கறி கலவைசாதம், மிளகுதூள் முட்டை, புதன் கிழமை புளியோதரை, தக்காளி முட்டை மசாலா, வியாழக்கிழமை எலுமிச்சை சாதம், தக்காளி முட்டைமசாலா, வெள்ளிக்கிழமை சாதம் சாம்பார் வேக வைத்த முட்டை மற்றும் உருளைக் கிழங்கு பொறியல் வழங்கப்படவுள்ளது என்றார்.

இதில் பெரம்பலூர் வட்டாரத்திலுள்ள 83 மையங்களைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள் சமையலர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.