Breaking News
recent

குஜராத்தில் மீண்டும் மதக் கலவரம் ! துணை ராணுவம் குவிப்பு ! 140 பேர் கைது !



குஜராத் மாநிலம் வதோதராவில் மீண்டும் இந்து முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு பாஜகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜகவினர் முஸ்லிம்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தி பல்வேறு இடங்களில் தீ வைத்தனர்.

இதனால் முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த காவல்துறையினர் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இரு தரப்பிலும் 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வதோதரா முழுவதும் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

வதோதரா என்பது நரேந்திர மோடி பாராளுமன்ற வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற தொகுதியாகும். பின்னர் அந்த தொகுதியில் ராஜினாமா செய்தார்.

குஜராத் மாநிலம் என்பது உலக வரலாற்றில் இந்தியாவை தலைகுனிய வைத்த மாநிலமாகும். இதே மாநிலத்தில் தான் 3 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கருவறுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் பாஜகவினர் வன்முறையை திட்டமிட்டு உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கலவரம் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் மொபைல் இன்டர்நெட், குறுந்தகவல் அனுப்புவது தடை செய்யப்பட்டது.


வதோதரா வன்முறையை ஆங்கில ஊடகங்களான யாஹூ நியூஸ், இந்தியா டுடே, தி ஹிந்து உள்ளிட்ட ஆங்கில ஊடகங்கள் மட்டுமே செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த மதக்கலவரம் தொடர்பாக இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடரந்து கலவரத்துக்கு காரணமானவரகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே நந்தா தெரிவித்தார்.


 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.