Breaking News
recent

நெஞ்சை உருக்கும் ஒரு உண்மை சம்பவம். இது ஐக்கிய அரபு எமிரேட்சில்.


ஒரு  நண்பன் வேண்டுமாகஇருந்தால்அந்தநண்பன்உண்மையானவனாக 
இருக்கவேண்டும் என்று சொல்வார்கள் பெரிவர்கள் நட்பை பற்றி நாம் எவ்வளவு பேசினாலும் அது பேசி தீராத ஒன்று சிறுவயதில் நண்பர்களாக இணைந்து வாழ்வு முழுவதும் ஒன்றாக கழித்து இறப்பிலும்  ஒன்றாக கைகோர்த்த நண்பர்கள் பற்றிய கதை இது நெஞ்சை நிச்சயம் கரைக்கும் 

ஓபைத் கல்பா அல் கபி 60 வயதான முதியவர் ஐக்கிய அரபு எமிரேட்சின் அஜ்மான் பகுதில் வசிப்பவர் 66 வயதான சலீம் நயீம் ஐக்கிய அரபு எமிரேட்சின்ராஸ் அல் கைமா பகுதில் வசிப்பவர் இருவரும் சிறுவயதில் ஒன்றாக நண்பர்களாக பழகி பின்னர் வாழ்க்கையை வெவ்வேறு பகுதில் அமைத்துகொண்டர்கள் இருந்தும் அவர்களுக்கு இடையிலான நட்பு  விட்டு போகாமல் பேணியே வந்துள்ளார்கள் 

கடந்த  வெள்ளி கிழமை ராஸ் அல் கைமா பகுதில் நடைபெற்ற திருமண 
விழாவில் இருவரும் கலந்து கொள்ள திட்டமிட்டு அதன்படி சலீம் நயீம் முன்பே திருமண விட்டிற்கு வந்து காத்திருக்க தொடங்கினர் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக காத்திருந்தும் கூட அஜ்மானில் இருந்து வருவதாக கூரிய நண்பன் ஓபைத் கல்பா அல் கபி வந்து சேரவில்லை மாறாக அவர் வருகின்ற வழியில் வீதி விபத்தில் அகப்பட்டு மரணித்த செய்தி காற்றலையில் தவள்ந்து வந்து காதுகளில் விலுந்துள்ளது 

தன் ஆருயிர் நண்பன் மரணித்த செய்திக்கேட்டு மயங்கி விழுந்த சலீம் நயீம் அவ்விடத்திலேயே உயிர் இழந்துவிட்டார் இந்த செய்தி அந்த திருமண வீட்டையே மிகவும் கலங்க செய்ததோடு அல்லாமல் ராஸ் அல் கைமா மற்றும் அஜ்மான் பகுதில் முழுவதும் மிகுந்த சோகத்தை எற்படுத்தியிருக்கின்றது 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.