Breaking News
recent

ஹஜ் பயணிகளின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்!: ஜெயலலிதா

தமிழகத்தில் ஹஜ் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் பதிவு எணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதத் தலத்துக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள, மாநிலம் தோறும் மத்திய அரசு மானிய செலவில் வருடம் தோறும் குறிப்பிட்ட பயணிகளை புனிதப் பயணம் அழைத்து சென்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புனிதப் பயணம் மேற்கொள்ள பதிவு செய்பவர்களின் பட்டியல் அதிகரித்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
பயணம் மேற்கொள்ள 13 ஆயிரத்து 159 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் இதில் 2 ஆயிரத்து 672 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவதால், மீதம் உள்ளவர்கள் ஏமாந்து போகக் கூடும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள ஜெயலலிதா, 
தமிழகத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும், இதை மத்திய வெளியுறவுத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த வருடம் மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கித் தந்தது என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.