Breaking News
recent

கட்டாரில் தொழில் செய்பவர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி. அடிமைப்பட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை!

IMAGINE QATAR 01

கட்டார் நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டினருக்கு நெஞ்சில் பால் வார்த்த சட்டம் அமுலாகி உள்ளது.

அடிமைப்பட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. ஸ்பொன்சர் முறையை இல்லாமல் செய்திருக்கிறார்கள்..
அதாவது ஒரு தொழிலாளியின் ஒப்பந்த காலம் இரண்டு வருடம் என்று சொன்னால் அந்த இரண்டு வருட முடிவில் அந்த தொழிலாளி கட்டாரில் விரும்பிய இடத்தில் விரும்பிய நபரிடம் வேலை செய்யலாம் பிடிக்கா விட்டால் போயிட்டே இருக்கலாம்.
இச்சட்டம்  பலருக்கு சந்தோசத்தை கொடுத்துள்ளது..
அடிமைப்பட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை.
கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:
(இன்றைய “அல் வதன்” பத்திரிகைச் செய்தியில் இருந்து)
1-தொழிலாளார்களின் கடவுச் சீட்டை கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகளுக்கு ஏற்கனவே பத்தாயிரம் றியால் அபராதம் என்பது திருத்தப்பட்டு ஐம்பதாயிரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.!!

2-”குறூஜ்” எனும் கட்டாரில் இருந்து வெளியேறுவதற்கான “அனுமதி” ரத்து செய்யப்பட்டு மூண்று நாட்களில் அணுமதி வழங்கப்படும் விதத்திலான விண்ணப்ப முறை அறிமுகம்.
3-ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வருபவர்கள் -ஒப்பந்த காலம் வரையறை செய்யப்பட்டதாக இருந்தால் -ஒப்பந்த காலம் முடிந்ததும் வேறு வேலை தேடிக்கொள்ளலாம்.” ஆட்சேபனை இல்லை என்பதை உறுதிசெய்யும் ஆவனம் அவசியமில்லை.

வரையரை செய்யப்படாததாக இருந்தால் ஐந்து வருடங்களுக்குப் பின் விரும்பிய வேலையில் இணைந்து கொள்ளலாம்.
(எனவே உங்கள் ஒப்பந்தம் கால வரையரை செய்யப்பட்டுள்ளதா என்பதை இன்றே, இப்போதே உறுதி செய்து கொள்ளுங்கள்.)

4-தொழிலாளிகளுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்கப்படுகின்றது என்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய வங்கியின் மேற்பார்வையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதனூடாகவே சம்பளம் வழங்கப்பட வேண்டும்!!
5-தங்குமிட வசதிகள் தரம் வாய்ந்ததாக சுகாதார முறையில் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க பரிசோதகர்களின் எண்ணிக்கை 300 ஆல் அதிகரிப்பு.
அல் ஹம்து லில்லாஹ் !!
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Kannan - Designer - Portfolio சொன்னது…

idhu varai qatar local paper ( gulf time, peninsula and other english news paper ) kalil intha seithi veli vara villai , neengal kurippitta seithi unmai thana ?

Blogger இயக்குவது.