Breaking News
recent

பெரம்பலூர் ராமகிருஷ்ணா பள்ளியில் சமூக நல்லிணக்க விழா!



பெரம்பலூர் ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தின் சார்பி்ல் ராமகிருஷ்ணா பள்ளியில் சமூக நல்லிணக்க விழா மற்றும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி08-07-2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு ராமகிருணஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைவர் ம. சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் விவேகானந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.ஹஜ்ரத் முனீர் அவர்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகளையும்சமூக நல்லிணக்கத்தின் அவசியத்தையும் விவரித்தார்.

இந்த ரமலான் இபதார் நிகழ்ச்சி முடிந்ததும் ரிசிகேஷ் செல்லவிருக்கும் ராமகிருஷ்ணா கல்விக் குழும இயக்குநர் ம.சிவசுப்ரமணியனை பாராட்டினார்.

மத நல்லிணக்கத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டிற்கு முன்மாதிரியானது என்றும்  மௌலவி ர்அவர்கள் பாராட்டினர்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த .ம.சிவமசுப்ரமணியன்“ பெரம்பலூரில்  மதநல்லிணக்கம் ஓங்கியிருக்க வேண்டும். 

எ்வ்வித காழ்ப்புணர்ச்சியும் இருக்கக் கூடாது என்பதே தன் விருப்பம் என்றும் இன்றிரவு நான் ரிஷிகேஷ் செல்லவிருப்புது., எனக்கு மன நிம்மதியைத் தருகிறது. முஸ்லிம்களுக்கு இந்த இப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களை புன்னகையோடு கண்டு அவர்கள் இறை பிரார்த்ததனையோடு நான் இப்பயணம் மேற்கொள்வது எனக்கு மிகுந்த மன நிம்மதியைத்தருகிறது என்று தனது ஏற்புரையின் கூறினார்.

இந்நிகழ்வில்  பெரம்பலூர் நகர் மன்ற துணைத்தலைவர்  ராமச்சந்திரன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சுல்தான்மொய்தீன், அரிமா சங்க ஒஜீர், அரும்பாவூர் தாஹிர் பாஷா, சுல்தான் இப்ராஹிம், தமுமுக மாவட்டச் செயலாளர் ரஷீத் அஹமத், வி.களத்தூர் ஐடியல் பள்ளி இயக்குநர் வி.களத்தூர் கமால் பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்தார் நிகழ்ச்சிக்கு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சரவணன் நன்றி கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.