Breaking News
recent

ஷேய்க் சையத் மஸ்ஜித் (sheik zayed masjid )

                                                                          

ஐக்கிய அரபு இராச்சியத்தின்(United arab Emirates) தலைநகரமான அபுதாபியில் (abudhabi)அமைந்துள்ளதுஇது அந் நாட்டின் மிகப்பெரிய மசூதியும்உலகிலுள்ள மசூதிகளில் ஆறாவது பெரியதும் ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர்களில் ஒருவரும்அதன் முன்னாள் னாதிபதியுமான ஷேய்க் சையத் பின் சுல்தான் அல் நகியானின் (Sheikh Zayed bin Sultan Al Nahyan) பெயர் இம் மசூதிக்கு இடப்பட்டதுஇவ்விடத்திலேயே ஷேய்க் சையதின் உடலும் அடக்கம் செய்யப்பட்டதுஇம் மசூதியின் தோற்றம் (Atchitecture Design) முகம்மது அலி அல் அமேரிஇஸ்பாட்டியம்ஆல்குரோஇசுபெயர்சு மற்றும் மேசர் அசோசியேட்சு (Mohammad Ali Al-Ameri, Spatium, Halcrow, Speirs & Major Associates) போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு 2 பில்லியன் ஐக்கிய இராச்சிய திர்கம் (545 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவில் கட்டப்பட்டு, 2007 ஆம் ஆண்டின் இஸ்லாமிய ரமழான் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டதது
PiT புகைப்பட போட்டிக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் 

அபூதாபி – டுபாய் வீதிக்கும்( Abudhabi-Dubai Road), அபுதாபி – அல்-அய்ன் (Abudhabi-AlAin Road) வீதிக்கும் நடுவில் அமைந்திருப்பதால் எவர் கண்ணிலும் இருந்து தப்ப சந்தர்ப்பமே இல்லாத பிரமாண்ட அதிசயமே இந்த மசூதி. இதன் பிரமாண்டமும் அழகும் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக இதை மாற்றிவிட்டது. ஒரு இறை இல்லம் வெறும் சுற்றுலாத்தளமாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தொழுகை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. பெண்கள் உடலை முழுதாக மறைத்தாலே ஒழிய உள்ளே விடப்பட மாட்டது. நான் டுபாயில் தங்யிருந்தாலும் வேலைத்தளம் அபூதாபியில் இருப்பதாலும் ஒவ்வொரு நாளும் 160+160KM பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. வேலை தலத்திற்கு இடத்திகு மிக அருகில் இருந்தாலும் போகும் போதும் வரும் போதும் பார்க்க கிடைத்தும் போய் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் சமீபத்தில்தான் கிடத்தது. புகைப்படங்கள் அனைத்தும் என்னால் எடுக்கப்பட்டவையே……..

ஷெய்க் சயத் மசூதியின் வடிவமைப்பு, முகலாயக் கட்டிடக்கலையையும்(Mughal), மூரியக் மசூதிக் கட்டிடக்கலையையும்(Moorish) தழுவியதுஇதில் லாகூரில்(Lahore)உள்ள பாத்சாகி மசூதியினதும்(Badhshahi Masjidh), கசாபிளங்காவில்(Casablanca) உள்ள இரண்டாம் ஹஸன் மசூதியினதும் (Hassan ii Masjidh) நேரடியான செல்வாக்குக் காணப்படுகின்றதுகுவிமாடங்களின் (Dome) தளக் கோலம் பாத்சாகி மசூதியைப்(Badhsahi Masjidh)  பின்பற்றியதாக உள்ளதுஇம் மசூதியில் உள்ள வளைவுவழிகள் (Archways) அடிப்படையில் மூரியப் பாணியையும்(Moorish), மினார்கள் (Minarates) அராபியக் கட்டிடக்கலைப் பாணியையும் சார்ந்துள்ளனஎனவே இது முகலாய(Mughal)மூரிய (Moorish)மற்றும் அராபியக்(Arabic) கட்டிடக்கலைகளின் கலப்புப் பாணியைச் சார்ந்தது எனலாம்.இம் மசூதி 40,000 பேர் வழிபடுவதற்கான இடவசதி கொண்டதுபெரிய தொழுகை மண்டபத்தில்(Main Prayer Hall) 9,000 பேர் வரை தொழலாம்இதன் அருகேயுள்ள இரண்டு மண்டபங்கள் ஒவ்வொன்றும் 1,500 பேரை அடக்கக்கூடியதுஇவை பெண்களுக்குரியவைமசூதியின் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மினார்கள்(Minarates) ஒவ்வொன்றும், 115 மீட்டர்கள் (380 அடிகள்உயரமானவைமுதன்மைக் கட்டிடத்தினதும்சூழவுள்ள இடங்களின் கூரைகளிலும் ஏழு வித்தியாசமான அளவுகளில் மொத்தம் 82 குவிமாடங்கள் (Dome) உள்ளனஅதில் பெரியதின் வெளிப்புற உயரம் 75 மீட்டர்களும் (246 அடிகள்) அதன் வெளிப்புற சுற்றளவு 32.2 மீட்டர் (106 அடிகள்) ஆகும். குவிமாடங்கள்(Dome) சலவைக் கற்களால் (Marble) அழகூட்டப்பட்டுள்ளன. உள்ளக அலங்காரத்திலும் (Interior Decoration)சலவைக்கற்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளனவெளியில் உள்ள     திறந்த முற்றத்தில்(courtyard) 17,000 m2 (180,000 sq ft) தரைப்பளிங்குகளால் (Floral marble) அழகூட்டப்பட்டுள்ளது.
இரவில் நீல நிற விளக்குகளால் அழங்கரிக்கப்பட்டுள்ளது. இதை பார்ப்பதற்காகவே மாலையில் சென்ற நான் இரவு வரை காத்துக்கிடந்தேன். வுழூ செய்யும் இடம், நீர் பருகும் இடம் போன்றவை நிலக்கீழ் தலத்தில் உள்ளது. நிலக்கீழ் தளத்திற்கு செல்ல Escalator அமக்கப்ப்பட்டுள்ளது. தரை, சுவர், தூண்கள் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது. நவீன கட்டிடக்கலையின் ஒரு முக்கிய முக்கிய இடம் இந்த மசூதிக்கும் உண்டு.      
இம் மசூதி தொடர்பில் சில உலக சாதனைகளும் உள்ளன:
உலகின் மிகப்பெரிய சரவிளக்கு

உலகின் மிகப்பெரிய தள விரிப்பு 


  •    உலகின் மிகப் பெரிய தொங்கு சரவிளக்கும் (chandelier) இம் மசூதியிலேயே   உள்ளது.ஜேர்மனியில் (Jermany) இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு தொங்கு சரவிளக்குகள் இங்கே உள்ளனஇவை அனைத்தும் செப்பினால் (Copper) செய்யப்பட்டு பொன் (Gold Platted) பூச்சுப் பூசப்பட்டவைஇவற்றுட் பெரியது 10 மீட்டர் (33 அடி) விட்டமும், 15 மீட்டர் (49 அடி) உயரமும்கொண்டது.

  • இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தளவிரிப்புக் கம்பளம் (Floor Carpet) உலகின் மிகப் பெரிய கம்பளம் ஆகும். ஈரானியக் கம்பளவடிவமைப்புக் கலைஞரான அலி காலிக்கி (Iranian artist Ali Khaliqi)என்பவரால் வடிவமைக்கப்பட்ட இக் கம்பளம்ஈரானியக் கம்பளநிறுவனம் ஒன்றால் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் பரப்பளவு5,627 சதுர மீட்டர்கள் (60,570 சதுர அடி). இதனை உற்பத்திசெய்வதில் 1,200 நெசவாளர்களும்(Weavers), 20 நுட்பியலாளரும்(Technicians), 30 பிற தொழிலாளரும்(Workers)ஈடுபட்டனர். 47 தொன் நிறை கொண்ட இக் கம்பளத்தைச்செய்வதில் 35 தொன் கம்பளி, 12 தொன் பருத்தி என்பனபயன்பட்டனஇக் கம்பளத்தில் 2,268,000 முடிச்சுக்கள் (Knots)உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்விரு உலக சாதனைகளையும் முன்னர் ஓமானில்(Oman)உள்ள சுல்தான் கபூஸ் பெரிய மசூதி (Sultan Qaboos Grand Masjidh) கொண்டிருந்தது.
அழகிய வேலைப்பாடுகளுடன் தூண்கள் 1 
அழகிய வேலைப்பாடுகளுடன் தூண்கள் 2
தண்ணீர் பருகும் இடம்  

வுளு  செய்யும இடம் 

வேலைபாடுகளுடன் அழகிய உற் சுவர்கள் 1

வேலைபாடுகளுடன் அழகிய உற் சுவர்கள் 2
முற்புறத்  தோற்றம்
வேலைபாடுகளுடன் அழகிய உற் சுவர்கள் 3 
வேலைபாடுகளுடன் அழகிய உற் சுவர்கள் 4
வேலைபாடுகளுடன் அழகிய வெளிச் சுவர்கள்
வேலைபாடுகளுடன் அழகிய வெளிச் சுவர்கள்
விண்ணை தொடும் மினார்கள்   (MINARATE )  


 பளிங்குத்   தரை 
                                                                                  

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.